நடப்பு உலகக்கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளாக வலம் வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்ஷாலாவில் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.
இந்த உலகக்கோப்பை தொடங்கியது முதலே தொடர்ச்சியாக அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இரு அணிகளும் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
நடப்புத் தொடரில் இரு அணிகளுமே இதுவரை தோல்வியைச் சந்திக்கவில்லை என்பதால் இன்றைய போட்டியில் எந்த அணி தோல்வியுற்றாலும் அது அந்த அணிக்கு முதல் தோல்வியாக இருக்கும்.
முதுகெலும்பாகத் திகழும் ரோஹித் - கோலி
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல் என அனைவரும் சிறப்பான ஃபார்மில் அசத்தி வருகின்றன.
இந்திய அணியின் வெற்றியில் கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகிய இருவரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். சொல்லப் போனால், இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாகவே அவர்கள் இருவரும் திகழ்கின்றனர். பேட்டிங்கில் வலுவான அணியாக இந்தியா திகழ்வதால் கேப்டன் ரோகித் தொடக்கத்தில் களமிறங்கி அச்சமின்றி அடித்தாட முடிகிறது.
டைகர் நாகேஸ்வர ராவ் விமர்சனம்: ரவி தேஜா ரசிகர்களை சோதித்தாரா? சாதித்தாரா?
20 அக்டோபர் 2023
மதுரை புறநகரில் திருடிய தாய், 3 மகன்கள் கைது - வீட்டைச் சுற்றி தோண்டத்தோண்ட தங்க நகைகள்
21 அக்டோபர் 2023
இந்தியா vs நியூசிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
நான்கு போட்டிகளில் ரோஹித் சர்மா ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் 265 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 137.30. நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ரோஹித் இருக்கிறார்.
அதுபோலவே, விராட் கோலி 4 போட்டிகளில் ஒரு சதம் 2 அரைசதங்களுடன் 259 ரன்களை சேர்த்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 90.24. நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கோலி இருக்கிறார்.
வலு சேர்க்கும் கே.எல்.ராகுல் எழுச்சி
கடந்த ஓராண்டில் தொடக்க இடத்தை இழந்த ராகுல், மிடில் ஆர்டரில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. அந்த விஷயத்தில் அவர் யாரையும் ஏமாற்றவில்லை.
இந்த உலகக்கோப்பை போட்டியின் மூன்று இன்னிங்ஸ்களில் ராகுல் 150 ரன்கள் எடுத்திருந்தாலும், அவரது சராசரியை இன்னும் கணக்கிட முடியாது. ஏனென்றால் இதுவரை அவர் ஒருமுறைகூட அவுட் ஆகவில்லை.
சில காலம் முன்பு வரை அவர் இந்திய அணியில் விளையாடுவாரா இல்லையா என்று முடிவு செய்யப்படாத நிலையில் தற்போது இந்திய மிடில் ஆர்டரின் முதுகெலும்பாக மாறிவிட்டார்.
இந்திய அணிக்கு இதுவொரு நல்ல செய்தி. ஏனென்றால் ரோஹித், ஷுப்மான், கோலி ஆகியோரின் முதல் கனமான தொடக்க வரிசைக்குப் பிறகு, இந்திய பேட்டிங் ஆர்டர் சற்று பலவீனமாக இருந்தது. அதை இப்போது ராகுல் சிறப்பாகச் சரிசெய்துள்ளார்.
உலகக்கோப்பை: தென் ஆப்ரிக்கா வெற்றியை உறுதி செய்த அந்த '10 ஓவர்கள்' - இங்கிலாந்துக்கு சிக்கல்
கே.எல்.ராகுல் பேட்டிங் செய்யும்போது மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் இதுவரை நான்கு போட்டிகளில் 5 கேட்ச்களை பிடித்துள்ளார். இதில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு அற்புதமான கேட்சுகளும் அடங்கும்.
வங்கதேச வீரர் மிராஜின் கையுறைகளைத் தொட்டு ராகுலின் இடது பக்கம் பந்து சென்றபோது, அது வெகு தொலைவில் இருந்தது. ஆனால் ராகுல் ஓர் அற்புதமான டைவ் செய்து அதை கேட்ச் பிடித்தார். இதைப் பார்த்த வர்ணனையாளர், "என்ன அற்புதமான கேட்ச்!" என்று சிலாகித்தார்.
இதைத் தொடர்ந்து, நசும் அகமதுவின் கேட்சை எடுத்த ராகுல், இந்த உலகக்கோப்பைப் போட்டியில் எல்லோரையும்விட அவரது கீப்பிங் எந்த விதத்திலும் குறைவாக இல்லை என்று கூறினார்.
மேலும் ராகுலின் கீப்பிங் இந்திய பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் தருகிறது என்பதும் போனஸாக அமைந்துள்ளது.
உலகக்கோப்பை: பாகிஸ்தானை வென்றாலும் பட்டவர்த்தமான ஆஸ்திரேலியா அணியின் பலவீனம்
21 அக்டோபர் 2023
இந்திய கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை எழுதிய வங்கதேசத்துடனான தோல்வி
19 அக்டோபர் 2023
அஸ்வின் இடம் பெறுவாரா?
இந்தியா vs நியூசிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
மறுபக்கம் பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பேட்டர்களுக்கு கடும சவாலாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளதால் அவரால் இப்போட்டியில் விளையாட முடியாது என்பது இந்திய அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதேநேரம் வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூரும் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருடைய இடமும் சிக்கலாகியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் முகமது ஷமி அல்லது ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் சூர்யகுமார் யாதவிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியை காட்டமாக விமர்சித்த ஷோயப் அக்தருக்கு சச்சின் தந்த பதில்
அசுர பலத்துடன் நியூசிலாந்து
டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டிலிலும் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
அந்த அணி பேட்டிங்கில் டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலீப்ஸ், டெரில் மிட்செல், டாம் லேதம் என மிக நீண்ட வரிசையைக் கொண்டுள்ளது.
டெவான் கான்வே அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் ரிஸ்வான், ரோஹித், கோலிக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறார்.
பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, லோக்கி ஃபர்குசன் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் நியூசிலாந்து அணி பலம் மிக்கதாக வலம் வருகிறது.
இந்தியா vs பாகிஸ்தான்: ஆறே ஓவர்களில் தலைகீழாக மாறிய ஆட்டம் - என்ன நடந்தது?
14 அக்டோபர் 2023
உலகக்கோப்பை: நியூசிலாந்தின் தொடர் வெற்றிக்கு புதிய சிக்கல் - வில்லியம்சன் என்ன செய்வார்?
14 அக்டோபர் 2023
இந்தியா vs நியூசிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
அத்துடன், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி போன்ற திறமையான சுழற்பந்துவீச்சாளர்களும் இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் இந்திய ஆடுகளங்களில் நல்ல அனுபவம் பெற்ற சாண்ட்னர் சுழற்பந்துவீச்சில் கலக்குகிறார்.
தற்போதைய நிலையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் வரிசையில் அவரே முதலிடம் வகிக்கிறார். இதுவரை ஆடியுள்ள நான்கு போட்டிகளில் அவர் 11 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
அந்த அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய நிலையில் காயம் காரணமாக விளையாட முடியாதது அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆனாலும், அதையும் சமாளித்து நியூசிலாந்து அணி நடப்புத் தொடரில் வெற்றி மேல் வெற்றியைக் குவித்து வருகிறது.
புதிய பட்டுப் பாதை திட்டம்: அமெரிக்காவை முந்தி உலகை ஆளும் சீனாவின் கனவை நனவாக்குமா ?
21 அக்டோபர் 2023
கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் - இந்தியர்கள் விசா பெறுவது சிக்கலாகுமா?
21 அக்டோபர் 2023
தரம்ஷாலா ஆடுகளம் எப்படி?
இந்தியா vs நியூசிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
தரம்ஷாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இங்கு குளிரான மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் என்பதால் ஸ்விங் பவுலர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே சூழ்நிலைகளை உணர்ந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடினால் எளிதாக பெரிய ரன்களையும் குவிக்கலாம்.
அதே நேரம் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம்.
நடப்பு உலகக்கோப்பையில் இரு அணிகளுமே இதுவரை தோல்வி எதையும் சந்திக்காமல் வலம் வருவதால், இன்றைய போட்டியில் தோற்கும் அணிக்கு அது முதல் தோல்வியாக இருக்கும். அதேநேரத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெறும்.
லியோ பட விமர்சனம்: விஜய்க்கு இன்னொரு 'கில்லி'யாக காலம் கடந்து நிலைக்குமா?
21 அக்டோபர் 2023
மதுரை புறநகரில் திருடிய தாய், 3 மகன்கள் கைது - வீட்டைச் சுற்றி தோண்டத்தோண்ட தங்க நகைகள்
21 அக்டோபர் 2023
இரு அணிகளும் இதுவரை
இந்தியா vs நியூசிலாந்துபட மூலாதாரம்,GETTY IMAGES
நேருக்கு நேர்
மோதிய போட்டிகள் – 116
இந்தியா - 58
நியூசிலாந்து - 50
முடிவில்லை - 08
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியா - நியூசிலாந்து அணி 9 முறை நேருக்கு நேர் மோதிய்ஹள்ளன. அதில் நியூசிலாந்து அணி 5 முறையும், இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.
கடந்த 1987ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துடன் மோதிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தியிருந்தது.
2007, 2011, 2015 ஆகிய உலகக்கோப்பைகளில் சந்தித்துக் கொள்ளாத இரு அணிகளும் கடந்த உலகக்கோப்பையில் இருமுறை மோதிக்கொண்டன. லீக் ஆட்டம் மழையால் முடிவில்லாமல் போக, அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவுக்கு கொடுங்கனவாகத் திகழும் நியூசிலாந்து
ஐ.சி.சி. தொடர்களைப் பொருத்தவரை 1992ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அணிக்கு நியூசிலாந்து அணியே வில்லனாகத் திகழ்ந்து வருகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.சி.சி. போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக 9 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. அதுவும் 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் கிடைத்தது.
இருபது ஓவர் உலகக்கோப்பையில் 3 முறையும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு முறையும் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது.
Post a Comment
Post a Comment