"வாழ்வில் வசந்தம்"
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் "வாழ்வில் வசந்தம்" கிராமிய எழுச்சி வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் பகுதி அளவான 13 வது வீட்டுக்கான நிர்மாண வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, பொருளாளர் எஸ் ஏ பாஸித், நிந்தவூர் சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் நிதி உதவியாளர் ஏ அன்வர், நிந்தவூர் பிர்தௌஸ் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் அல் ஹாபிழ் சிம்லி ஆதம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
நிந்தவூரில் வீடற்றோருக்கான வீட்டு வசதியை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்குடன் பெஸ்ட் ஒப் யங் அமைப்பு, சீ.ஓ.லெஸ்தகீர் குடும்ப நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் இந்த பகுதி அளவான விட்டு நிர்மாணித்து கொடுக்க உள்ளனர். இதற்கென நிந்தவூர்-7 ம் பிரிவில் இருந்து தந்தை இல்லாத, வீட்டு வசதியற்ற, திருமண வயதை அடைந்த பயனாளி ஒருவருக்கு இந்த பகுதி அளவான வீட்டை நிர்மாணித்து வழங்க உள்ளனர்
நிந்தவூரை சேர்ந்த கல்விமான் மர்ஹும் சீ ஓ லெஸ்தகீர் அவர்களின் புதல்வரும், சீ ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளருமான முன்னாள் சுங்க அத்தியட்சகர் ஓ.எல்.சப்ரி இஸ்மத் அவர்களின் ஒருங்கிணைப்பில் சீ ஓ லெஸ்தகீர் குடும்ப நிதியத்தின் பங்களிப்புடன் இந்த பகுதி அளவான வீடு நிர்மாணிக்கப்பட உள்ளது. இதன் மூலம் வாழ்வதற்கு ஓரளவேனும் வசதியான வீடின்றி கஷ்டப்படும் ஏழைக் குடும்பத்தின் நிரந்தர வீட்டுக்கான கனவு நிறைவேறுகிறது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment
Post a Comment