பயனாளியிடம் கையளிக்கப்பட்டது




 


நூருல் ஹுதா உமர் 


காரைதீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2023 ம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தும் 250000/= அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடு (ஜெய விம) காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம். பார்த்திபன், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.