ஆலையடிவேம்பு கோட்டத்தில் 'குருபிரதிபா பிரபா' விருது பெறும் அறுவர்




 


வி.சுகிர்தகுமார் 0777113659

ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்தில் இவ்வருடம் அறுவர் 'குருபிரதிபா பிரபா' விருதினை பெற்றுக்கொண்டனர்.
அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையை சேர்ந்த ஐவருக்கும் அளிக்கப்பை புனித சவேரியார் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் ஒருவருக்கும் 'குருபிரதிபா பிரபா' (19) மாகாண கல்வி திணைக்களத்தால் வழங்கி வைக்கப்பட்டது.
கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட சிறந்த சேவை செய்தமைக்கான அதிபர்களுக்கான தேர்வில்
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட, ஆலையடிவேம்பு கல்வி கோட்ட, அளிக்கப்பை புனித சவேரியார் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் ஸ்ரீ மணிவண்ணன் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகருஸ்ண தேசிய பாடசாலை அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் மற்றும் பாடவிதான செயற்பாட்டிற்காக பிரதி அதிபர் மு.ஜயந்தன் நிர்வாகத்திற்காக பிரதி அதிபர் சி.மதியழகன் பாடசாலை ஒழுக்காற்று சமூகத் தொடர்பு நடவடிக்கைக்காக ஆசிரியை திருமதி.நீரஜா அகிலன் பாடசாலை மாணவர் தலைமைத்துவ திறன் விருத்திக்காக ஆசிரியை திருமதி.ஆ.ஜீவிதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கான விருதை மாகாண கல்வி பணிப்பாளர் வழங்கி வைத்ததுடன் அக்கரைப்பற்று, ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையை சேர்ந்த ஐவர் ஒரே தடவையில் 'குருபிரதிபா பிரபா' விருதை பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும்.