(வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை வலய இருநாள் மெய்வல்லுனர் பயிற்சி முகாம் நேற்று(7) வியாழக்கிழமை மஜித்புரம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சம்மாந்துறை வலய உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ. நசீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.வை.யசீர் அறபாத் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் மஜீத், உதவி கல்விப் பணிப்பாளர்களான வீ.ரி.சகாதேவராஜா, ஏ.முஸ்ரக்அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் முதலாம் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இந்த மெய்வல்லுனர் பயிற்சி முகாம் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது.
எதிர்வரும் 19ஆம் தேதி மாகாணமட்ட விளையாட்டு போட்டிக்கு தயார்படுத்தும் முகமாக இம்முகாம் ஏற்படுத்தப்பட்டது .
இதன் துவக்க விழாவில் விளையாட்டு ஆரோக்கிய தொடர்பான சிறப்புரையை வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்த பிரதான உரையை பிரதம அதிதி அறபாத் நிகழ்த்தினார்.
நன்றி உரையை வித்தியாலய அதிபர் எம்.முஸம்மில் நிகழ்த்தினார்.
மாவட்ட பயிற்றுவிப்பார்களான தாஜுடின், றிபாஸ் ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள்.
Post a Comment
Post a Comment