அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கான புதிய பஸ்.




 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 வண்டி ஒன்றினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா இன்று (28ஆம் திகதி) வழங்கி வைத்தார்.
பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக அவர் வழங்கி வருகின்றார்.
இதன் அடிப்படையில் 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் மற்றும் கல்விச்சமூகத்தின் வேண்டுகோளுக்கமைய ஜக்கிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும் கல்வி ஊழியர் சங்கத்தினுடைய இணைப்புச் செயலாளருமான வெ.வினோகாந்தின் சிபாரிசுக்கு அமைய வழங்கி வைத்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை முன்பாக இருந்து பஸ் வண்டியினை செலுத்தி வந்த சஜித் பிரேமதாசா பிரதான வீதிகளினூடாக பாடசாலையினை அடைந்தார். இதன்போது அவருக்கு மாணவர்கள் அமோக வரவேற்பளித்தனர்.
இதன் பின்னர் அங்கு இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர் சம்பிரதாயபூர்வமாக பஸ் வண்டியின் திறவுகோலை மாணவர்களிடம் கையளித்தார். தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வுகளையும் கண்டு களித்தார்.
தொடர்ந்து கல்வியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிப்பட்டனர்.
இதேநேரம் பாடசாலை அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் உள்ளிட்டவர்களினால் நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி சஜித் பிரேமதாசா கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வுகளில் பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளரும் பிரதேச செயலாளருமான வி.பபாகரன் வலயக்கல்விப்பணிப்பாளர் உதயகுமார் பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் அகிலன் ஜக்கிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும் கல்வி ஊழியர் சங்கத்தினுடைய இணைப்புச் செயலாளருமான வெ.வினோகாந்த் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.