'அட எம்மா ஏய்' பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்
இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வந்தவர் மாரிமுத்து. இவர் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து 'எதிர் நீச்சல்' என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதில் இவர் பேசும் 'அட எம்மா ஏய்' வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது. இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014-ஆம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம்' செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.
Post a Comment
Post a Comment