கடுங்காற்றில் வேம்பு மரம் முறிந்து பாடசாலை பாரிய சேதம்!




 


(வி.ரி.சகாதேவராஜா)


நேற்று முன் தினம்(13) புதன்கிழமை மாலை வீசிய அடிகாற்றில் பாரியவேம்பு மரம்  விழுந்து பாடசாலை ஒன்று சேதமடைந்துள்ளது.

 இச்சம்பவம் சம்மாந்துறை அல்மதினா வித்தியாலயத்தில் இடம் பெற்றுள்ளது.

 நேற்று முன்தினம் வீசிய கடும் காட்டில் அங்கிருந்த வேம்பு மரம் பாடசாலை வகுப்பறை கட்டடத்தின் மீது விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று பாடசாலை அதிபர் ஜனாபா.எம். டி. சரினா தெரிவித்தார் .

நேற்று(14) வியாழக்கிழமை காலை அப்பாடசாலையின் இணைப்பாளர் எ. சிராஜுதீன் அங்கு சென்று பார்வையிட்ட பொழுது மிகவும் பெரிய சேதம் ஏற்பட்டு இருப்பதை அறிந்தார்.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானாவிற்கு அறிவிக்கப்பட்டது.

இணைப்பாளர் சிராஜுதீன் உடனடியாக சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிக்கும், போலீசாருக்கும், பிரதேச செயலாளருக்கும் அறிவித்தார்.
 அதன் பிற்பாடு அந்த மரங்கள் அகற்றப்பட்டன.

சுமார் 100 பிள்ளைகள் இருந்து கற்கும் வகுப்பறைகள் இந்த அனர்த்தத்தில் சேதமாய் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் இரவு கல்முனை காரைதீவு சம்மாந்துறை கரையோரப் பகுதிகளில் பாரிய இடி மின்னல் முழக்கத்துடன்   கடுங் காற்று வீசியது. தொடர்ந்து கனமழை பொழிந்தது. அத்தருணத்தில் மின்சாரம் தடைபட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரட்சிக்கு மத்தியில் இந்த மழை பொழிந்ததமையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.