அங்குரார்பண நிகழ்வு




 


பாறுக் ஷிஹான்


முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தின்  சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட பங்குபற்றுதலுடன் கூடிய  கல்வி அபிவிருத்தி - கட்டம் - III அங்குரார்பண நிகழ்வு கிண்ணியா  வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(22) நடை பெற்றது.    

திருகோணமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக கல்வி அடைவில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்ற கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள  கல்வி மற்றும் கல்வி அடைவுகளைப் பாதிக்கின்ற பல்வேறு தேவைகள் உடைய 13 பாடசாலைகளில் மேற்படி தொணிப்பொருளில் மூன்றாம் கட்டமாக  முன்னெடுக்கப்படுகின்றது. முதலாவது கட்டத்தில் 5 பாடசாலைகளும் இரண்டாவது கட்டத்தில் 13 பாடசாலைகளும் இத் தொடர் நிகழ்ச்சித்திட்டத்தில் பயன்பெற்றன.