( வி.ரி.சகாதேவராஜா)
ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அடுத்து தடைபட்டிருந்த குறித்த குடிநீர் திட்டம் ஒரு மாத காலத்துக்குள் மீண்டும் நிவர்த்தி செய்யப்பட்டு மக்களுக்கு குடிநீர் கிடைத்திருக்கிறது.
"குடிநீருக்காக அல்லாடும் கல்லரிப்பு பழங்குடி மக்கள்!
அரசியல்வாதிகள் அதிகாரிகள் கவனிப்பார்களா? " என்ற தலைப்பில் எமது பத்திரிகையில் எமது செய்தியாளர் சகா வினால் எழுதப்பட்ட செய்திக் கட்டுரை யூலை மாதம் 1ஆம் வெளியாகி இருந்தது.
அதனையடுத்து அதே bright future நிறுவனம் ஒருமாத காலத்தில் மீண்டும் புனரமைத்து குடிநீரை வழங்கி வருகிறது.
அதற்காக அங்குள்ள சமூக செயற்பாட்டாளர் மலர்ச்செல்வி உள்ளிட்ட சிலர் பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
தற்போது மீண்டும் குடிநீர் கிடைத்ததையிட்டு மக்கள் ஊடகங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குடிநீருக்காக மீண்டும் மீண்டும் தொலைதூரம் பயணிக்க வேண்டி இருக்கின்றது .
இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்று அந்த மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதேவேளை ஊடகங்களிலும் பரவலாக செய்திகள் வெளியாகின.
Post a Comment
Post a Comment