சரத் வீரசேகரவின் அமெரிக்க விசா மறுப்பு




 


சரத் வீரசேகரவின் அமெரிக்க விசா மறுப்பு : சபாநாயகரிடம் முறைப்பாடு


நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அடுத்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கான சிறப்புப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.


10 நாட்கள் நடைபெறும் இது தொடர்பான செயலமர்வுக்கு துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் தலைவர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதில் பங்கேற்பவர்கள் அமெரிக்க விசா பெற வேண்டும்.


அதற்காக தேசிய பாதுகாப்பு துறை கண்காணிப்புக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர விண்ணப்பித்த போதிலும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, குறித்த மாநாட்டில் பங்குபற்றும் தலைவர்கள் பட்டியலில் இருந்து சரத் வீரசேகரவின் பெயரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


இது தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குவதற்கான மக்கள் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக தாம் தெரிவித்த அறிக்கையினால் அமெரிக்கா தனக்கு விசா வழங்க மறுத்துள்ளதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.