நூருல் ஹுதா உமர்
சமுர்த்தி வங்கிகளின் செயற்திறனை வலுவூட்டும் நோக்கில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸினால் தயாரிக்கப்பட்ட சமுர்த்தி வங்கியின் செயற்திறன் மதிப்பீட்டு அறிக்கை கைநூல் பற்றி சாய்ந்தமருது பிரதேச செயலக வெளிக்கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு இன்று சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வுக்கு அம்பாறை மாவட்ட சமுர்த்தி காரியால வங்கி கண்காணிப்பு உத்தியோகத்தர் ஏ.ஜே.எம்.ஹனீபா கலந்து கொண்டார்.
இதில் பிரதேச செயலக தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், கருத்திட்ட முகாமையாளர் எஸ்.நிபாயா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஐ.ஹிதாயா உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச செயலக வெளிக்கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment