சமூக விஞ்ஞான போட்டியில் மாகாணத்தில் முதலிடம்




 


(வி.ரி.சகாதேவராஜா)


இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் இருந்து மூன்று மாணவர்கள் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

 இதன்படி இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியின் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும்
எம்.கே.யூசுப் ஷயான் முதலாம் இடத்தைப்  பெற்று கல்லூரிக்கு பெருமை தேடி தந்துள்ளதாக  கல்லூரி
அதிபர் எம். ஐ. மாஹிர்
தெரிவித்தார்.

குறித்த மாணவன் சமூக விஞ்ஞான போட்டியில் மாகாணமட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு  தெரிவானதை தொடர்ந்து பாடசாலை சமூகம் அண்மையில் இவரை பாராட்டி கௌரவித்தது.

ஆசிரியர்களான
 எஸ். எல்.எம். குத்தூஸ்  எஸ்.எல்.பஸ்மியா தம்பதிகளின் செல்வப்புதல்வன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது