நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் பனங்காடு ஆகிய பிரதேச வைத்தியசாலைகளில் நடைபெறும் செயற்றிட்டங்கள் மற்றும் PSSP வேலைத் திட்டங்களைக் கண்காணிப்பதற்காகவும் பொதுமக்களினால் அனுப்பி வைக்கப்படுகின்ற அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காகவும் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இன்று 2023.09.16 ஆம் திகதி குறித்த வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்
இதன்போது குறித்த வைத்தியசாலைகளில் நடைபெறுகின்ற கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும் நடைபெறுகின்ற வேலைகளின் தரத்தை பரிசீலிப்பதற்காகவும் தொழில்நுட்ப உத்தியோகத்தரை கேட்டுக்கொண்டதுடன் ஒப்பந்தக்காரர்களுடனும் இவ்விடயம் தொடர்பில் பேச்சுக்கள் நடாத்தப்பட்டன
விசேடமாக இவ்விஜயத்தின் போது அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய சாலையில் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ள பிராந்திய மருந்து விநியோக பிரிவின் வேலைத்திட்டங்களையும் பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம் மாஹிர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது
ஊடகப்பிரிவு
Post a Comment
Post a Comment