( வி.ரி.சகாதேவராஜா)
ஸ்ரீலங்கா அரசு இன்னமும் தமிழருக்கான நீதியை தரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் தர முடியாது .தரவும் மாட்டாது . எனவே ஐநா சபை இந்த நீதியை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு நேற்று (21) வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட வளத்தாப்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் பேசிய தமிழரசுட்சி முக்கியஸ்தரும் முன்னாள் காரைதீவு தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அறைகூவல் விடுத்தார்.
வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் காத்தவராயன் காந்தன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் போராட்டம் நேற்று(21) வியாழக்கிழமை வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பதாகைகள் சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் .
அங்கு ஜெயசிறில் மேலும் பேசுகையில்..
நீதி தேவதை கண் திறக்க வேண்டும். ஐக்கிய நாடு சபை இந்த போர்க் குற்றவாளிகளை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். பாட்டில் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன. தமிழர் பிரதேசங்கள் தொல்லியல் என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டதற்கான நீதி இன்னும் கிடைக்கவில்லை. மனித உரிமை மீறப்படுகின்றது. இது எல்லாம் நீதிக்கு உட்படுத்தப்பட வேண்டும் . மொத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.என்றார்.
Post a Comment
Post a Comment