(வி.ரி. சகாதேவராஜா)
அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியின் கிழக்கு மாகாண மட்ட போட்டிக்கு சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயம் இலக்கிய நாடகப் போட்டியில் முதலிடம் பெற்றுத் தெரிவாகி சாதனை படைத்துள்ளது.
மேற்படி, கல்முனை கல்வி மாவட்ட மட்ட தமிழ்த் தினப் போட்டி நேற்று முன்தினம் (31) வியாழக்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் அகிலா கனகசூரியம் பிரசன்னத்தில் நடைபெற்றது.
அங்கு இடம் பெற்ற இலக்கிய நாடகம் திறந்த போட்டியில் முதலாம் இடம் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.
இந்த புறநானூறு இலக்கிய நாடகத்தை நெறியாள்கை செய்த நாடகம் அரங்கியல் பாட ஆசிரியர் கிளிப்டன் செலர் மற்றும் இதில் பங்கு பற்றிய மாணவச் செல்வங்களுக்கும் பாடசாலை அதிபர் சோ.இளங்கோபன் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக மாகாண மட்டத்திற்கு இப் பாடசாலை இலக்கிய நாடகப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தமை பலரையும் ஈர்த்துள்ளது.
பெற்றார் மற்றும் கோரக்கர் சமூகம் சார்பில் அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ். மோகன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Post a Comment