துஆ பிரார்த்தனை





 (நூருல் ஹுதா உமர்)


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரும், முஸ்லிம் சமூகத்தின் மாபெரும் தலைவருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் 23வது நினைவு தினம் இன்று செப்டம்பர் 16ம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. 

அந்த வகையில் அம்பாரை மாவட்ட கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையினரின் ஏற்பாட்டில் கல்முனை முஹையதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரும், முஸ்லிம் சமூகத்தின் மாபெரும் தலைவருமான, முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் 23வது நினைவு தினம்
அம்பாரை மாவட்ட கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபைத்தலைவர் மெளலவி பி.எம்.ஏ ஜலீல் (பாகவி) தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமாணி ரவூப் ஹக்கீம், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் ஆகியோர் தலைவர் அஸ்ரப் நினைவுரையை நிகழ்த்தினார். 

அம்பாரை மாவட்ட கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையினர் குர்ஆன் ஓதி தமாம் செய்ததுடன், துஆ பிராத்தனை செய்தனர்.

முஹையதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அசீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சிப்பிரமுகர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.