(எம்.என்.எம்.அப்ராஸ்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த(19-23) திகதி வரை திருகோணமலை,கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 14 வயதின் கீழ் பிரிவு ஆண்களுக்கான 80 மீட்டர் தடைதாண்டல் ஓட்ட நிகழ்ச்சியில் பங்குபற்றிய கல்முனை அல் மிஸ்பாஹ் மகா விததியாலய மாணவனான எம்.எம்.எம்.ஆகில் மிகா முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கத்தையும் தனதாக்கி கொண்டு பாடசாலைக்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம் மாணவனை பயிற்றுவித்த பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.ஜே.எம்.சஸான் , எம்.ஏ.எம்.றிஸ்மி மஜீட்,எம்.எம்.புஹாரி மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஜே.எம். சாபித், எம்.ஜே.எம். முபீத் ஆகியோருக்கும் தங்கம் வென்ற மாணவனுக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் அனைவரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
Post a Comment
Post a Comment