மதுபானத்தை வாங்கிய பின்,பணம் கொடுக்காது ஓடிய பரிசோதகர் இடை நிறுத்தம்




 


மட்டக்களப்பிலுள்ள மதுபானசாலையில் மதுபானத்தை வாங்கிய பின் பணம் கொடுக்காது முச்சக்கரவண்டியில் தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சேவையிலிருந்து கடந்த சனிக்கிழமை (09) முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


மட்டு நகரிலுள்ள மதுபானசாலைகள் இரண்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை பகல் முச்சக்கரவண்டி ஒன்றில் சென்று மதுபானசாயில் அரைப் போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு பணம் முச்சக்கரவண்டியில் இருப்பாதாகவும் கொண்டுவந்து தருவதாக தெரிவித்து மதுபானத்தை வாங்கி கொண்டு பணத்தை கொடுக்காது முச்சக்கரவணடியில் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.சி. கமராவில் பதிவாகியதுடன் அது ஊடகங்களில் செய்தியாகவும் வெளியாகியது.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் பரிசோதகர் வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவராவார்.

அவர் சம்பவதினத்தன்று பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்று இந்த மோசடியில் ஈடுபட்ட பின்னர் அவர் வாகரை பொலிஸ் நிலையத்திற்கு திரும்பாது தலைமறைவாகியுள்ளார்.

குறித்த பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே தங்க நகையை கொள்ளையடித்த குற்றச்சாட்டு மற்றும் இதுபோன்று 7 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 7 முறை பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்க்கது

Post a Comment

[facebook][blogger]

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.