உணவுக் கண்காட்சி.




 


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் பல்லின மதத்தவர்களின் பண்டிகைகால உணவுக் கண்காட்சி இன்று (25) நடைபெற்றது.

தரம் 3 பாடவிதானத்தில் காணப்படும் "பல்லின மதத்தவர்களின் பண்டிகைகால உணவுகளை செயற்பாட்டு ரீதியாகக் காட்சிப்படுத்தல்" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியை தரம் 3 பகுதித் தலைவர் மற்றும் வகுப்பாசிரியைகள் இணைந்து பெற்றோரின் பங்களிப்புடன் ஒழுங்கு செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிறா கல்லூரி முன்னாள் அதிபரும் பிரபல கணிதபாட ஆசிரியருமான ஹம்ஸா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் நஸார் விஷேட அதிதியாகவும், இப்பாடசாலையின் பிரதி அதிபர்களான நுஸ்ரத் பேகம் மற்றும் ஷெறோன் டில்றாஸ் சிறப்பு அதிதிகளாகவும் மேலும் தரம் 5 பகுதித் தலைவர் ஜஹ்பர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். 

இலங்கையில் காணப்படும் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்த்தவம் ஆகிய நான்கு இனத்தவர்களும் தமது பண்டிகைக்காலத்தின்போது பரிமாறும் பாரம்பரிய, கிராமிய மற்றும் துரித என பல்வேறுபட்ட உணவுகள் குறிப்பாக தூர இடங்களில் இருந்து பெற்றோரால் தருவிக்கப்பட்ட அத்துடன் பெற்றோரால் வீடுகளில் செய்யப்பட்ட உணவுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.