வி.சுகிர்தகுமார் 0777113659
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் (13) அதிபர் ஆர்.நித்தியானந்தன் தலைமையில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 9மணிமுதல் ஆரம்பமான இத்தேர்தலில் பாடசாலை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டு வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் பிரதமர் 10 அமைச்சர்கள் 10 பிரதி அமைச்சர்கள் என 95 மாணவ தலைவர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இத்தேர்தலில் 145 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியதுடன் 700 மாணவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
அதிபரும் மாணவர் பாராளுமன்ற தேர்தல் ஆணையாளருமான ஆர்.நித்தியானந்தன் மேற்பார்வையில் நடைபெற்ற இத்தேர்தலில் பிரதி அதிபர் ந.நேசராஜா பிரதி தேர்தல் ஆணையாளராகவும் பிரதி அதிபர் உள்ளிட்ட 50 ஆசிரியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நடைபெற்ற பாடசாலை மாணவ தேர்தல் முறையானது தங்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தந்ததாகவும் இதன் மூலம் தேர்தல் தொடர்பான தங்களது அறிவையும் ஆளுமையையும் அதிகரிக்க முடிந்ததாகவும் மாணவர்கள் இங்கு கருத்து தெரிவித்தனர்.
மேலும் இச்சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்த கல்வி அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் மாணவர்கள் குறிப்பிட்டனர்.

Post a Comment
Post a Comment