வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது




 


பிரத்தியேக பாவனைக்காக அல்லாது ஏனைய தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்படவுள்ளது.

இதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இவ்வருட இறுதிக்குள் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று(05) இடம்பெற்ற அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு அதன் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நேற்று(05) கூடியது. 

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி திருத்த சட்டமூலத்திற்கு அரச நிதி தொடர்பான தெரிவுக்குழு நேற்று(05) அனுமதி வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.