45 வருடங்களை கடந்த நிலையில்,குடிநீர் இணைப்பு




 


வி.சுகிர்தகுமார் 0777113659 

 ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்ணகிகிராம மக்களுக்கான குடிநீர் இணைப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
கண்ணகிகிராம சனசமூக நிலைய தலைவர் கே.கோகுலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் கே.வினோதன் அக்கரைப்பற்று  நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் முகாமையாளர் யு.கே.எம்.முசாஜித் பொறியியலாளர் மயூரன் குடிநீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளினால் பொதுமக்களுக்கான குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட மக்களுக்கும் குடிநீர் இணைப்பிற்காக பாடுபட்டுழைத்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்தனர்.
கண்ணகிகிராம குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 45 வருடங்களை கடந்த நிலையில் இதுவரையில் குறித்த கிராமமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலை இருந்து வந்தது.
இருப்பினும் கடந்த வருடம் குடிநீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் கே.வினோதனின் மேற்பார்வையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக திட்டத்தை  முன்கொண்டு செல்ல முடியாத நிலை உருவானது.
இந்நிலையில் தனவந்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் நிறுவனங்களின் உதவியுடன் குடிநீர் குழாயினை பதிக்க முடியும் எனும் அடிப்படையில் திட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் இத்திட்;டத்தை முழுமையடையச் செய்வதற்கு கண்ணகிகிராம சனசமூக நிலையம் கிராம அபிவிருத்தி சங்கங்கள் பல்வேறு நலன் விரும்பிகள்; நிதிப்பங்களிப்பினை வழங்கி விரைவாக குடிநீரினை பெற்றுக்கொடுக்க உதவி புரிந்தமை குறிப்பிடத்தக்கது.