திருமண சீர்திருத்தம் 2023




 


திருமண சீர்திருத்தம் 2023

(அமர்வு 06)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி கிளை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் அதன் பிரதான அங்கம் வகிக்கின்ற சகல பள்ளிவாயல்களுடனான திருமண சீர்திருத்தங்கள் தொடர்பான விரிவானதும் ஆறாவதுமான அமர்வு இன்று 2023.09.27 ஆம் திகதி புதன்கிழமை இரவு 8:15 மணிக்கு காத்தான்குடி-03 முஹைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் மேல் தளத்தில் நடைபெற்றது.
திருமணங்கள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை சம்மேளனத்தின் கௌரவ செயளாலர் அஷ் ஷேய்க் ALM சபீல் (நளீமி) BA மற்றும் ஜம்இய்யாவின் கௌரவ தலைவர் அஷ் ஷேய்க் AM ஹாரூன் (ரஷாதி) ஆகியோர் முன்வைத்தனர்.
தொகுக்கப்பட்ட திருமண சீர்திருத்தங்கள் திரையிடப்பட்டு திருமண சீர்திருத்தக் குழு இணைப்பாளர் அஷ் ஷேய்க் MMM இல்ஹாம் (பலாஹி) BA அவர்களினால் வாசிக்கப்பட்டது.
சமூகளித்த அனைவர்களும் திருமணங்கள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டதுடன் அதற்காக தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.
சில சகோதரர்கள் முன்வந்து தங்களது சில கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
இறுதியாக சம்மேளனத்தின் கௌரவ தலைவர் அல் ஹாஜ் AMM ரஊப் JP மற்றும் ஜம்இய்யாவின் கௌரவ செயலாளர் அஷ் ஷேய்க் MIM ஜவாஹிர் (பலாஹி) BA ஆகியோர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இவ் அமர்வில் ஜம்இய்யா, சம்மேளனம், பள்ளிவாயல்கள் சார்பாக நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இத்தீர்மானங்கள் கட்டம் கட்டமாக ஒவ்வொரு தரப்பினருடனும் கலந்துரையாடப்பட்டு இறுதியாக ஊர்தழுவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.
_ஊடகப் பிரிவு_
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை