தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்! !
கவரகல தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தால் சேதமடைந்த வீடுகளை இ.தொ.கா.வின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன்னர் வழங்கிய கூரைத்தகடுகளை அம்மக்களுக்கு உடனடியாக வழங்குமாறும், தீயினால் சேதமடைந்த வீடுகளின் பழுதுபார்க்கும் பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருமாறும் தோட்ட நிர்வாகத்திற்கு அவர் பணிப்புரையும் விடுத்தார்.
Post a Comment
Post a Comment