முதலுதவி பயிற்சி பட்டறை




 


நூருல் ஹுதா உமர்


மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா மற்றும் YMMA மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டிலும் டைடன் ஆசியன் கல்வி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பிலும் புனித சென்ஜோன்ஸ் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும், புனித சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் கல்முனை கோட்டத்தின் அத்தியட்சகருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் ஆணையர் கெப்டன். எம்.டி. நௌசாத்,டைடன் ஆசியன் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் என். கோகுளதாசன், நிறுவனத்தின் தலைவர் ஏ.ஆர்.எம்.சர்ஜூன், தலைமை நிர்வாக அதிகாரி எ.எ.எ. அப்(f)ரி, சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் சம்மாந்துறை கோட்டத்தின் அத்தியட்சகர் எம். ஆர்.ஹுசைன் என பலர் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட சென்ஜோன்ஸ் படைப்பிரிவின் ஆணையர் கெப்டன். எம்.டி. நௌசாத் அவர்களால் கலந்துகொண்டு டைடன் ஆசியன் கல்வி நிறுவனத்தின் இளைஞர் யுவதிகளுக்கு விரிவுரைகளும் பயிற்சிகளும் வழங்கப்பட்டதுடன் அன்று மாலை கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி சம்பந்தமான எழுத்து மூல மற்றும் செயன்முறை பரீட்சைகளும் படைப்பிரிவினால் நடாத்தப்பட்டது.