தேசிய ஷுஹதாக்கள் தினத்தை முன்னிட்டு காத்தான்குடியில் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு
எதிர்வரும் 03ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவுள்ள 33வது தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தின நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
அத் தினத்தில் தமது வியாபார ஸ்தாபணங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தையும் மூடி இந் நிகழ்விற்கு பூரண ஒத்துழைப்புத் தருமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
அன்றைய தினம் வியாபார ஸ்தாபணங்கள் முழுமையாக மூடப்படவுள்மையினால், வீண் சிரமங்களினை தவிர்க்கும் முகமாக அதற்கு முன்னைய தினமே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களினை கொள்வனவு செய்து கொள்ளுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சிணைகள், இன்னும் பல அடிப்படையான பிரச்சினைகள் சம்மந்தமாக கவனயீர்ப்பு நிகழ்வொன்றினையும் அன்றைய தினம் காலை 09:30 மணியிலிருந்து ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்னால் இருந்து நடைபவணியாக சென்று மீரா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் முன்றலில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் நமது பிரதேசத்திலுள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், யுவதிகள் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினர்களும் பங்குபற்றுமறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
جزاك الله خيرا
இவ்வண்ணம்,
பொதுச் செயலாளர்,
ப.மு.நி சம்மேளனம்,
காத்தான்குடி.
2023.08.01
Post a Comment
Post a Comment