சான்றிதழ் கற்கைநெறி தொடர்கிறது





 ( வி.ரி.சகாதேவராஜா)


 அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்த மூன்று மாத கால சமூகசெயற்பாடு சான்றிதழ் கற்கைநெறி பிரதி சனிஞாயிறு தினங்களில் கிரமமாக நடைபெற்று வருகிறது.

இதன் அங்குரார்ப்பண வைபவம்  கடந்த(22) சனிக்கிழமை பெண்கள் வலையமைப்பின் தலைவி திருமதி தியாகேஸ்வரி ரூபன் தலைமையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வலையமைப்பின் பொதுச்சபை இணைப்பாளர் திருமதி கலைவாணி தயாபரனின் ஒழுங்கமைப்பில் வகுப்புகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகிறது. 

நேற்றுமுன்தினம் ஞாயிறு முழு நேர செயலமர்வை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிட்டா மோகன்  நடாத்தியிருந்தார்.