( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அரைகுறையாக கிடக்கும் பாதை செப்பனிடப்பட வேண்டும் என இரண்டு தடவைகள் கூறப்பட்ட பொழுதிலும் இன்னும் அது செப்பனிடப்படவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
காரைதீவு பிரதேச
அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் பிரசன்னத்தில் பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொழுது குறித்த விபுலானந்த வீதி கார்பெட் இடப்பட்டும் இருமருங்கிலும் முடிவுறுத்தப்படாமல் இருப்பது குறித்து முறைப்பாடு இரு தடவைகளில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக இரண்டு கூட்டங்களில் இந்த முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.
அதில் கலந்து கொண்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர் இதனைச் சீர்செய்து தருவதாக பகிரங்கமாக உறுதி அளித்திருந்தார்.
ஆனால் ஐந்து மாதங்கள் கடந்தும் இன்னும் அந்த காப்பட் வீதி இது மருங்கிலும் செப்பனிடப்படவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களால் பொதுமக்களுக்கு என்ன பயன் ? பல மணி நேரம் மனித வலு மற்றும் நிதி செலவழிப்பதில் என்ன பிரயோசனம்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.
இவ் விபுலானந்த வீதி ஏனவே கொங்கிறீட் வீதியாக இருந்தது. ஆனால், மக்களின் எந்தவித கருத்தும் கணக்கு எடுக்கப்படாமல் அதற்கு மேலே இரண்டு அடி உயரத்தில் காப்பட் இடப்பட்டது .இதனால் மக்களின் குடிமனைகள் தாழ்ந்து போனது. அத்துடன் வாகனங்களை வீதிகளில் ஏற்றுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள். அதனால் வாகனங்கள் பழுதடைந்து விடுகின்றன .எனவே இதனை சீர் செய்து தருமாறு அந்த மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment