நாவிதன்வெளிக்கோட்டம் முதலிடம்!





 (வி.ரி. சகாதேவராஜா)


 சம்மாந்துறை  வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் 469 புள்ளிகளைப் பெற்று நாவிதன்வெளிக் கோட்டம் முதலிடத்தை சுவீகரித்துக்கொண்டது.

 இரண்டாம் இடத்தை  435 புள்ளிகளைப் பெற்ற சம்மாந்துறை கோட்டமும், மூன்றாம் இடத்தை 183 புள்ளிகளைப் பெற்ற இறக்காமம் கோட்டமும்
 பெற்றுக்கொண்டன.

 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசீர் தலைமையில் இடம் பெற்ற போட்டியில் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

 நாவிதன்வெளி கோட்டத்தில்
171 ஆண்களும் 298 பெண்களும் இந்த 469 புள்ளிதகளைப் பெற்றுக் கொண்டனர். சம்மாந்துறை கோட்டத்தில் 195 ஆண்களும் 240 பெண்களும் 435 புள்ளிகளைப் பெற்றனர்.
இறக்காமம் கோட்டத்தில் 183ஆண்கள்  183 புள்ளிகளை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அங்கு பெண்கள் கலந்து கொள்ளவில்லை.

போட்டிகள் யாவும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.