அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக் அனுசரணையில் கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகம் நடத்திய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 22 முன்னணி உதைபந்தாட்டக் கழகங்கள் கலந்து கொண்ட மர்ஹூம் எம்.ஐ.எம்.இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ண மின்னொளி உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகத்தை 5:0 என்ற கோல் அடிப்படையில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி கொண்டு மர்ஹும் எம்.ஐ.எம்.இக்பால் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (26 ) இரவு இடம்பெற்ற இறுதிப் போட்டிக்கு முன்னாள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் பிரதம அதிதியாவும், முன்னாள் கெளரவ கிழக்கு மாகாண சபை உறூப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளரும் கே.எம்.அப்துல் றஸாக் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment