பாறுக் ஷிஹான்
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி அம்பாறை பண்டாரதுவ கிராமத்தில் விடுதலைப் புலிகளால் 30 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 33 வருடங்கள் நிறைவடைந்துள்ளன
இந்த நிலையில், பண்டாரதுவ படுகொலை ஞாபகார்த்தமாக விசேட நினைவேந்தல் நிகழ்வு பண்டாரதுவ விமலராம விகாரையில் திங்கட்கிழமை(7) இரவு இடம்பெற்றது
கிராம மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment