பாறுக் ஷிஹான்
டெங்கு பெருக்கம் அதிகரித்திருப்பதை தடுப்பதுடன் மிக நீண்டகால காடு மண்டி காணப்பட்ட அன்னமலை பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் எனும் தொனிப் பொருளுக்கமைவாக சிரமதான நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை(20) நடைபெற்றது.
இதற்கமைய 157 வருட பொலிஸ் தினத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எம்.எஸ்.கே தசநாயக்க ஆலோசனையில் சவளக்கடை பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம் ஜௌபர் நெறிப்படுத்தலில் டெங்கு ஒழிப்புச் சிரமதானம் பிரதேச வைத்திய அதிகாரி ஆர்.வீ.ஏ.பி பண்டார தலைமையில் தலைமையில் இடம்பெற்றது.
இச்சிரமதான நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சீனித்தம்பி சுமதி வழிகாட்டலில் அப்பிரிவிற்குட்பட்ட சமுர்த்திப் பயனாளிகள் பங்கேற்று காடு மண்டி காணப்பட்ட வைத்தியசாலை வளாகத்தை துப்பரவு செய்தனர்.
மேலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இச்சிரமதான நடவடிக்கையின் போது விச ஜந்துக்கள் அழிக்கப்படுவதுடன் சவளக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமூர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டு தத்தமது பங்களிப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment