பாறுக் ஷிஹான்
கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம் இன்று(9) கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானதுடன் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி, கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதில் கல்முனை அக்கரைப்பற்று சிரேஸ்ட சட்டத்தரணிகள் சட்டத்தரணிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment