சாதனை





 (வி.ரி.சகாதேவராஜா)


அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சிறுவர் சித்திரப்போட்டி 2022 யில் சம்மாந்துறை வலயப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சம்மாந்துறை செந்நெல் சாஹிரா மகாவித்தியாலயத்தில் இருந்து பங்குபற்றி வலய மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லூரியின் அதிபர் யு.எல். முஹம்மட் இஸ்மாயில்  தலைமையில் நேற்று (14) திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவில் பாடசாலையின் இணைப்பாளர் எம்.எம்.எம். ஜௌபர், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் சித்திரப்பாட இணைப்பாளர்  எஸ்.எல் அப்துல் முனாப், ஆசிரியையான ஜனாபா எஸ்.எல் ஜன்னத் முன்னிலையில் இன்று மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.