(வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் நடாத்தி வரும் பெருவிளையாட்டுகளுக்கான போட்டியில் பூப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி அணி இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
திருகோணமலையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் பூப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி அணி 20 வயதிற்குட்பட்ட போட்டியில் இரண்டாமிடம் பெற்றுகொண்டது.
இதன்போது ஏறாவூர் மட்/மட்/அல் அலிகார் தேசிய பாடசாலை வெற்றி கொண்டு அடுத்த சுற்றில் அம்பாறை அம்/டி.எஸ். சேனநாயக்கா தேசிய பாடசாலை வெற்றி கொண்டு அரை இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மட்/புனித மிக்கேல் கல்லூரி வெற்றி கொண்டு இறுதி போட்டிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இறுதி போட்டிற்கு தெரிவுசெய்யப்பட்டனர்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி அணியிடம் தோல்வியுற்று இரண்டாமிடம் பெற்றுகொண்டனர்.
இதன் மூலம் தேசிய போட்டிக்கு விபுலானந்த பூப்பந்தாட்ட அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment