பி லவ் கண்டி அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது




 


லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பி லவ் கண்டி அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

 இதன்படி, முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அவுரா அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

அந்த அணிசார்பில் அதிகபடியாக, தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் 148 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பி லவ் கண்டி அணிசார்பில் அதிகபடியாக, கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்