பயிற்சி செயலமர்வு




 


வி.சுகிர்தகுமார்  

 சமுர்த்தி வங்கி மற்றும் வங்கிச்சங்களின் கணிணிமயப்படுத்தலுக்கான மென்பொருள் மேம்படுத்தல் மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளை முன்கொண்டு செல்லும் வகையிலான ஆறு நாள் பயிற்;சி செயலமர்வின் முதல் நாள் நிகழ்வுகள் இன்று (26) ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ந.கிருபாகரனின் ஒத்துழைப்போடு முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் ஒருங்கிணைப்பில் ஆரம்பமான பயிற்சி செயலமர்வில் வளவாளர்களாக அம்பாரை மாவட்ட சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் டி.எம்.குணவர்த்தன மற்றும் அம்பாரை மாவட்ட வங்கி கணிணி மேம்படுத்தல் திட்ட முகாமையாளர் ரி.தெய்வேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி வங்கி மற்றும் வங்கிச்சங்கம், தலைமைப்பீட காரியாலயம் சமுர்த்தி கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஆறு நாட்கள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சி செயலமர்வில் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று மற்றும் இறக்காமம் பிரதேச செயலகத்தை சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொள்கின்றனர்.