ஜனாஸா நலன்புரி அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும்





 நூருல் ஹுதா உமர்


அம்பாறை மாவட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாக சபை தெரிவும் மாளிகைக்காடு ஸம் ஸம்  சனசமூக நூலகக் கட்டிடத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல். இம்தியாஸ் தலைமையில் நேற்றிரவு (09) இடம்பெற்றது.

அமைப்பின் எதிர்கால விடயங்கள் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், பழுதடைந்துள்ள ஜனாஸா வாகனத்தை மீள திருத்திமைக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதுடன் புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. அமைப்பின் தலைவராக ஏ.எல்.எம்.அனுவர் தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.எஸ்.சுல்பிகார் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் பொருளாளராக ஏ.எல்.எம்.பாயிஸ், உப தலைவராக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.றாபி, உப செயலாளராக ஏ.எல்.எம்.பாஹிம் (ஜிப்ரி), கணக்குப் பரிசோதகராக  எம்.ஏ.இக்பால் ஆகியோரும் காரியாலய பொறுப்பாளர்களாக அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களான ஏ.எம்.பஸ்மீர், ஜே.எம்.பாஸித், நிதி வசூலிப்புக்கு பொறுப்பாளராக எம்.ஏ.இக்பால் ஆகியோர் சபையோரின் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஊடகப் பொறுப்பாளர்களாக ஏ.ஆர்.எம். றாபி, என்.எம்.றுஸ்தி, ஜே.எம். ஹஸான் ஆகியோரும் மாளிகைக்காடு கிழக்குக்கான அமைப்பாளராக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் எப்.எம்.ரஊபி, மாளிகைக்காடு மத்திக்கான அமைப்பாளராக ஏ.எம்.தஸ்மீன், மாளிகைக்காடு மேற்குக்கான அமைப்பாளராக எம்.எம்.நபார் ஆகியோரும் அமைப்பின் போசகராக சமூக செயற்பாட்டாளர் யூ.எம்.றியாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.