சம்பியனாகியது





 சம்பியனாகியது காத்தான்குடி மத்திய கல்லூரி


கல்வி அமைச்சின் வழிகாட்டலில் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலை வணிகக் கழகம், வணிக வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி கோட்ட பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட வணிக புதிர் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (10.08.2023) மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நடைபெற்றது.


இறுதிப் போட்டியில் காத்தான்குடி அல்-அமீன் மகா வித்தியாலயத்தோடு மோதிய எமது காத்தான்குடி மத்திய கல்லூரியானது வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டது.


இப்போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, பயிற்றுவித்த ஆசிரியர்கள், ஊக்கமளித்த பெற்றோர்கள் ஆகியோருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


KCC

Kattankudy