வாண்மை விருத்தி





 (வி.ரி. சகாதேவராஜா)


 கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின்  வாண்மை விருத்திக்காக உலக வங்கி உதவியுடன் திட்டம் ஒன்று அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை அறிவிருத்தி திட்டம்(SBPTD) என்ற மகுடத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

 முன்னோடியாக மூதூர் பட்டிருப்பு சம்மாந்துறை ஆகிய மூன்று வலயங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் முன்னேற்ற அறிக்கை தொடர்பாக நேற்று  செவ்வாய்க்கிழமை மூன்று வலயங்களுக்கும்  கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் எம்.எம். ஜவாத்
பிரதி கல்விப் பணிப்பாளர் ஆர்.நிமலரஞ்சன் ஆகியோர் விஜயம் செய்து அதிபர் மற்றும் கல்வி சார் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடாத்தினார்கள்.

சம்மாந்துறை வலயத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம்  நேற்று (8) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரியில் வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா தலைமையில் நடைபெற்றது.
 
இதன்படி இன்று முதல் வகை மூன்று( type 3) பாடசாலைகளுக்கு இத்திட்டத்தை அமல் படுத்துவதற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

ஏலவே ஏனைய வகை பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 மேலும் ஆசிரியர் ஓய்வறை( staff room) என்பது இனிமேல் ஆசிரியர் அபிவிருத்தி பிரிவு( Teacher development unit) என்று மாற்றப்பட வேண்டும். என்று கூறப்பட்டது.
 மீண்டும் எதிர்வரும் 18 ஆம் தேதி பட்டிருப்பு வலயத்திற்கும் பத்தொன்பதாம் தேதி சம்மாந்துறை வலயத்திற்கும் இறுதிக்கட்ட மதிப்பீட்டிற்காக வருகை தர இருக்கின்றார்கள்.

 இதேவேளை, உலக வங்கியின் ஏற்பாட்டில் பேரில் பிறிதொரு நிபுணத்துவ மதிப்பீட்டு குழு  இரண்டு வாரங்களில் இந்த பாடசாலைகளுக்கு விஜயம் செய்ய இருக்கிறது.

அதன் அறிக்கையை பொறுத்தே எதிர்காலத்தில் கிழக்கு மாகாண கல்வி வளர்ச்சிக்கு உலக வங்கி நிதி வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.