(வி.ரி.சகாதேவராஜா)
அவுஸ்திரேலியா கன்பேரா ரொட்டரிக்கழகம் இதுவரை 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை கல்முனை றோட்டரிக் கழகத்திற்கு வழங்கியது.
கல்முனை ரொட்டரிக்கழகம் கல்முனை கஷ்டப்பிரதேச மாணவர்களுக்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் மேலும் ஒரு தொகுதி அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது.
மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயம்,மல்வத்த நாவலர் வித்தியாலயம்,புதிய வளாத்தாப்பிட்டி, தாஹிறா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளுக்காக 195,000/- பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு கல்முனை ரொட்டடரிக் கழக தலைவர் றொட்டேரியன் ஏஎல்ஏ. நாசர் தலைமையில் நடைபெற்றது.
இதற்கான நிதியுதவியை வழங்கிய கன்பேரா ரொட்டரிக்கழகத்தின் உறுப்பினர் றொட்டேரியன் ரவீந்திரன் கலந்துகொண்டு கொப்பிகளை வழங்கினார்.
மேலும் றொட்டேரியன் மு.சிவபாதசுந்தரம் சமூக சேவைப்பணிப்பாளர், முன்னாள் தலைவர் றொட்டேரியன் கு.திருச்செல்வம்,மற்றும் றொட்டேரியன் எம். அமிர்தசங்கர் ஆகியோரும் பங்குபற்றினர்
Post a Comment
Post a Comment