தமிழ் மொழித்தின நிகழ்வு




 


( காரைதீவு சகா)


அகில இலங்கை தமிழ் மொழித்தின
சம்மாந்துறை வலய மட்ட தமிழ் மொழித்தின நிகழ்வு சம்மாந்துறை அல்மர்ஜான் உயர்தரப் பாடசாலையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

தமிழ்ப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.ஜனோபர் தலைமையில் துவக்க விழா நடந்தேறியது.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.கௌரவ அதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏஎல்.அப்துல் மஜீட் மற்றும்
சிறப்பதிதியாக உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தனர்.

தமிழ்ப்பாட உதவி கல்வி பணிப்பாளர் ஏஎல்எம்.றஷீன் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் இசட் எம். மன்சூர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், அதிபர்கள், மாணவர்கள் உட்பட பல்துறைசார் நடுவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.

பல்சமய அனுஷ்டான மேடையேற்றலுடன் கோரக்கர் தமிழ் வித்தியாலய  மாணவிகளின் நடனங்களும் அரங்கை சிறப்பித்தன.

ஐம்பது போட்டிகளில் முதலிடத்தை சம்மாந்துறை கோட்டமும் இரண்டாம் இடத்தை நாவிதன்வெளி கோட்டமும் மூன்றாம் இடத்தை இறக்காமம் கோட்டமும் பெற்றுக் கொண்டு மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகின.