தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்ற விபத்தில் அதன் பிரதான பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்துள்ளார்.
54 வயதான உபுல் செனரத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள மிருக வைத்தியசாலையை அண்மித்து நேற்றைய தினம்(15) இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.
மிருக வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதுடன், அந்த மரம் மின் கம்பத்தில் சாய்ந்தமையினால் மின் கம்பமும் முறிந்துள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதனருகில் சென்றுகொண்டிருந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின் கம்பம் வீழ்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
Post a Comment
Post a Comment