(வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட மல்வத்தை விபுலானந்தா மகாவித்தியாலயத்தில் இம்முறை தேசிய கணித ஒலிம்பியாட் பரீட்சையில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவி செல்வி சிவரூபன் ஜினோதிகாவை சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா பாடசாலைக்கு சென்று வாழ்த்தி பாராட்டினார்
நேற்று(15) செவ்வாய்க்கிழமை இம் மகிழ்ச்சிகரமான நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் உமர் மௌலானா அவர்களோடு பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எல்.மஜீட் திருமதி நிலுபரா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் சாதனை மாணவி ஜினோதிகாவின் பெற்றோரும் கணிதம் கற்பித்த ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
Post a Comment
Post a Comment