(சுகிர்தகுமார்) 0777113659
உலகலாவிய ரீதியில் தற்போது பேசும் பொருளாக காணப்படும் நெற்செய்கையில் ஒருங்கிணைந்த பீடைமுகாமைத்துவம் (integrated pest Management ( IPM ) பற்றி பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சி வேலைத்திட்டம் விவசாய திணைக்களத்தினால் முன்னெடுக்ககப்பட்டு வருகின்றது.
இவ்வேலைத்திட்டத்தை ஒவ்வொரு விவசாய விஸ்த்தரிப்பு காரியாலயத்தின் கீழுள்ள விவசாயிகளுக்கும் எதிர்வரும் போகத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு விவசாயத்திணைக்களத்தினால் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக அட்டாளைச்சேனை விவசாய விஸ்தரிப்பு நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் விவசாய திணைக்கள போதானாசிரியர்களளுக்கான பயிற்சி வேலைத்திட்டத்தின் களவிஜய பயிற்சியும் வயல் விழாவும் இன்று மேற்கொள்ளப்பட்டது.
விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீரின் வழிகாட்டலில் அம்பாரை மாவட்ட சிரேஸ்ட விவசாய போதானாசிரியர்களான ஏ.ஜ.ஏ.பெரோஸ் மற்றும் ஏ.ஜெய்லாப்த்தீன் ஆகியோரின் தலைமையில் இன்று அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற களவிஜய பயிற்சி நிகழ்வில் அம்பாரை மாவட்ட விவசாய திணைக்கள போதானாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நஞ்சற்ற உணவு உற்பத்தி, சூழலை பாதுகாத்தல், உற்பத்தி செலவை குறைத்தல், விவசாயின் வருமானத்தை உயர்த்தல், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தல், உயிர் ஆபத்துமிக்க நோயிலிருந்து மக்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இப்பயிற்சி நெறி மூலம் பல்வேறு அனுகூலங்கள் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகவுள்ளதாக அம்பாரை மாவட்ட சிரேஸ்ட விவசாய போதானாசிரியர் ஏ.ஜ.ஏ.பெரோஸ் கருத்து தெரிவித்தார்.

Post a Comment