நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்ற பாலரட்ணம் கோகுலராஜன் இன்று 2023.08.21 மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்றுக் கொண்டார்
கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற கடமையேற்பு நிகழ்வில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பேரில் 2023.01.01 ந் திகதி முதல் செயற்படும் வண்ணம் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக பதவி உயர்த்தப்பட்ட பி. கோகுலராஜன் நிந்தவூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக மிகச் சிறப்பான முறையில் பணியாற்றியவராவார்.
2004 ம் ஆண்டு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்ற இவர் பொத்துவில், கல்முனை தமிழ் பிரிவு, காரைதீவு ஆகிய பிரதேச செயலகங்களில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக அர்ப்பணிப்புடன் செயலாற்றி பலரது நன்மதிப்பையும் பெற்றவராவார்.
கிழக்கு மாகாண மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு அமைவாக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையேற்றுக் கொண்ட இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்
Post a Comment