ஓய்வு பெற்றார்





 (வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை அல்- மர்ஜான் முஸ்லிம்  மகளிர் கல்லூரியின் (தேசியப்பாடசாலை) அதிபர்  அல்ஹாஜ். எம்.ஐ.மீராமுகைடீன் நேற்று ஓய்வு பெற்றார்.

இன்று (21) திங்கட்கிழமை  சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா முன்னிலையில் பதில் அதிபர் அன்வர் அலியிடம் கடமைப் பொறுப்பை அவர் கையளிக்கின்றார்.

1984 இல் ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்ட மீராமொகைதீன் 2000 இல் அதிபர் சேவையில் இணைந்து கொண்டார்.

சம்மாந்துறை ஹிஜ்ரா வித்தியாலயத்தின் ஸ்தாபக அதிபராக பதவியேற்ற அவர் பின்னர்  செந்நெல் சாஹிரா மகாவித்தியாலய அதிபராக நீண்ட கால சேவையாற்றினார்.

இறுதியாக சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை அதிபராக கடமையை பொறுப்பேற்று நேற்று வரை சிறப்பாக பணியாற்றி வந்தார்.

இரு தடவைகளில் ஜனாதிபதி கையினால் சிறந்த அதிபருக்காக "குரு பிரதீபா" விருது பெற்றவர்.
சுமார் 39 வருட காலம் கல்விச் சேவை ஆற்றிய  அதிபர் மீராமொஹைதீன் பலராலும் கண்ணியமாக நேசிக்கப்பட்டு வந்தவர்.