மாணவர் ஒருவர் என்முன் குற்றவாளியாக நிறுத்தப்படும்போது நான் மிக கவலையடைகின்றேன்




 




வி.சுகிர்தகுமார் 0777113659 


 மாணவர் ஒருவர் என்முன் குற்றவாளியாக நிறுத்தப்படும்போது நான் மிக கவலையடைகின்றேன் என அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தெரிவித்தார்.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு இன்று வருகை தந்த அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.
தனது பிறந்ததின நாளில் மரக்கன்றுகளை வழமையாக நட்டுவரும் சிறந்த செயற்பாட்டினை கொண்ட அவர் பிறந்த தினமான இன்று( 10) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு வருகை தந்தார்.
வருகை தந்த அவருக்கு பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையிலான பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து மகத்தான வரவேற்பளித்தனர்.
அங்கு பாடசாலையின் வளாகத்தில் இரு மரக்கன்றுகளையும் அவர் நட்டு வைத்தார்.
இதன் பின்னர் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மாணவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளையும் அவருக்கு தெரிவித்திருந்தனர்.
இதன்போது உரையாற்றிய அவர் ஆசிரியர்கள் மேய்ப்பவர்கள். எம்மை வளப்படுத்துகின்றவர்கள். அவர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும். ஆனாலும் அன்மைக்காலமாக ஆசிரியர்களை தாக்குகின்ற அல்லது மரியாதை செலுத்தாத மிக மோசமான குற்றச் செயல்களை நாம் காணுகின்றோம். இது போன்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்ற மாணவர்கள் நாளாந்தம் என் முன் நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் என்முன் குற்றவாளியாக அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களாக நிறுத்தப்படும்போது நான் மிக கவலையடைகின்றேன். சிலரை மூடிய அறையில் விசாரணை செய்து சீர்திருத்த பாடாசாலைக்கும் அனுப்பும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே மாணவர்கள் எப்போதும் ஆசிரியர்களை மதிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்களை பற்றி விமர்சனங்கள் அவ்வப்போது இருந்தாலும் நான் எப்போதும் எனது ஆசான்களை மதிக்கின்றவன். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என நம்புகின்றவன். அப்படி நான் இருந்ததனால்தான் இன்று உங்கள் முன் நீதிபதியாக இருந்து பேசுகின்றேன் என்றார்.

பற்றி விமர்சனங்கள் அவ்வப்போது இருந்தாலும் நான் எப்போதும் எனது ஆசான்களை மதிக்கின்றவன். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என நம்புகின்றவன். அப்படி நான் இருந்ததனால்தான் இன்று உங்கள் முன் நீதிபதியாக இருந்து பேசுகின்றேன் என்றார்.

இதேநேரம் போதைப்பொருளின் இலக்கு குழுவாக மாணவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.  போதைப்பொருள் மாபியாக்களின் பிடியில் மாணவர்கள் சிக்குண்டு வருவதையும் நான் பல்வேறு சந்தர்ப்பத்தில் அவதானித்துள்ளேன். சில வேளைகளில் பெற்றோர்களே தங்களது பிள்ளையினை சீர்திருத்த பாடசாலைக்கு அனுப்பி வையுங்கள் என சொல்லுமளவிற்கு மாணவர்களின் நிலை மாற்றம் அடைந்து வருகின்றது. அவர்களது நடை உடை பாவனைகளிலும் மாற்றம் இடம்பெறுகின்றது.
ஆகவே நல்ல மாணவர்களாக இருக்கும் நீங்கள் இவ்வாறான தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் நல்ல இலட்சியத்துடன் கல்வியை தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் மத்தியில் வாழும்போதே நல்லவற்றை செய்யுங்கள். நான் வீட்டுத்தோட்டம் மற்றும் மரம் நடுவதை இளவயது முதல் வழக்கமாக கொண்டுள்ளவன். அதுபோல் நீங்களும் மரம் நடுங்கள். மரம் நமக்கு வரம். மரத்தினை நேசிப்பவன் எப்போதும் கெட்ட சிந்தனைகளை செயல்களில் ஈடுபடமாட்டான். நாளை உலகம் அழியப்போகின்றது என்பது தெரிந்தாலும் இன்று ஒரு மரத்தை நடுங்கள் எனும் நபிகளின் வார்த்தை மற்றும் பெரியோர்களின் சிந்தனையை கூறி முடித்தார்.