பாடசாலை சுற்றுமதில் சுவரோவியங்கள் திறந்து வைப்பு!





 (வி.ரி. சகாதேவராஜா)


 சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலய சுற்றுமதிலில் வரையப்பட்ட அழகான சுவரோவியங்கள் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் பொன் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இத்திறப்புவிழாவில் பிரதம அதிதியான
 சம்மாந்துறை  வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்தார்.
.

 கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா மற்றும் ஆசிரிய ஆலோசகர் பி.வி.குணரத்ன ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள் .

ஜேர்மனியில் வாழும் அன்னமலையைச் சேர்ந்த கொடையாளி சித்திரசேனன் விஜிகரனின் ஏற்பாட்டில் வரையப்பட்ட இச் சுவர்ஓவியங்கள் மூன்றரை லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது.

ஜேர்மனியிலிருந்து வந்த கொடையாளி விஜிகரன் தம்பதியினர் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் வலயக்கல்விப் பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.